Wednesday, April 16, 2008

சென்னை டாக்டரும் நெல்லை வக்கீலும்

1. மூன்று பெண்கள். ஒவ்வொருவர்க்கும் இரண்டு பெண்கள். இவர்கள் எல்லோரும் சாப்பிட ஹோட்டலுக்கு வந்தார்கள். அங்கே ஏழு நாற்காலிகள் தான் இருந்தது. ஆனால் அவர்கள் எல்லோரும் உட்கார முடிந்தது. எப்படி?

2. சென்னையில் இருக்கும் ஒரு டாக்டருக்கு நெல்லையில் ஒரு வக்கீல் சகோதரர். ஆனால் அந்த நெல்லை வக்கீலுக்கு சென்னையில் ஒரு டாக்டர் சகோதரர் கிடையாது. ஏன்?

3. நான் இரண்டு பக்கெட்டில் தண்ணீர் வைத்திருந்தேன். ஒரு பக்கெட் தண்ணீர் 15 டிகிரி சென்டிகிரேட். மற்ற பக்கெட் தண்ணீர் 15 டிகிரி ஃபாரன் ஹீட். என் பேத்தி வந்து இரண்டு பக்கெட்டிலும் ஒரு 5 ரூபாய் நாணயத்தை ஒரே சமயத்தில் போட்டாள். எந்த பக்கெட்டில் நாணயம் முதலில் அடியைத் தொடும்.

எப்படி, ஏன், எது. சொல்லுங்கள் பார்க்கலாம்

10 comments:

dondu(#11168674346665545885) said...

2. சென்னையில் இருக்கும் டாக்டர் வக்கீலின் சகோதரி.

2. 5 ரூபாய் 15 டிகிரி செண்டிகிரேட் பக்கெட்டில்தான் முதலில் அடியைத் தொடும். 15 டிகிரி ஃபாரன்ஹீட் ஐஸாக இருக்கும். ஆகவே நாணயம் மேலேயே இருக்கும் (ஐஸ் உருகும் உஷ்ணம் 32 டிகிரி ஃப்ரான்ஹீட்டில்)

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

1.முதள் பெண்ணுக்கு இரு பெண்கள். அந்த இரு பெண்களுக்கு ஆளுக்கு இரு பெண்கள். ஆக மொத்தப் பெண்கள் 1+2+4 = 7 பெண்கள். 7 நாற்காலிகள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பிரேம்ஜி said...

1)ஒரு பாட்டிக்கு ரெண்டு பெண்கள் மற்றும் நான்கு பேத்திகள்
2)சென்னையில் இருப்பது பெண் டாக்டர்
3)15 டிகிரி பாரன்ஹீட்டில் தண்ணீர் பனிக்கட்டி ஆகியிருக்கும்.

விடைகள் சரியா திரு.சகாதேவன் அவர்களே!

சகாதேவன் said...

வெல்கம் ப்ரேம்ஜி
அழகாக சொல்லிவிட்டீர்கள்.

சகாதேவன் said...

டோண்டு, வாங்க வாங்க,
சபாஷ்,சரியான பதில்.

குமரன் (Kumaran) said...

எனக்கு முதல் கேள்விக்கும் கடைசி கேள்விக்கும் விடை தெரிந்தது. இரண்டாவது கேள்விக்கு விடையை பின்னூட்டங்களில் தெரிந்து கொண்டேன். :-)

சகாதேவன் said...

குமரன், வருகைக்கு நன்றி.
இரண்டாவதும் சிம்பிள் கேள்விதான்.
இன்னும் யோசித்திருந்தால்
நீங்களே சொல்லியிருக்கலாம்.

goma said...

நான் வருமுன் பதில்கள் அவுட் ஆகி விட்டன......
முதல் கேள்விதான் எனக்கு இடித்தது....
இது போல் நிறைய கேளுங்கள்

நானானி said...

சகா!
தினம் உங்க பதிவு எட்டிப் பாப்பேன்.
ரெண்டு நாள் பிஸி. அல்லாரும் முந்திக்கிடாங்க. நான் வேறென்ன சொல்றது?
நல்லாருக்கு குவிஸ் மாஸ்டர்!
தூள் கிளப்புங்க.

சகாதேவன் said...

என்ன நானானி, உங்களைத்தான் முதலில் எதிர்பார்த்தேன்.இன்னும் வரும்.பாருங்கள்.

கோமா, வள்ளுவத்தை முதலில் பார்த்தால் அதில் ஹாஸ்யத்தில் கேட்ட கேள்விகளுக்கு பதில் பார்த்து விடுகிறேன். நன்றாக இருக்கிறது.