Sunday, August 24, 2008

கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்.

ஆங்கில எழுத்து A கொண்ட எண்ணை கண்டுபிடிக்க நீங்கள் நிறைய எண்ணிப் பார்க்க வேண்டும்.
விடை, நம்ப முடியவில்லையா? one thousand தான்.

2. சைபரை விட பெரிய எண் எழுதிக் கொள்ளுங்கள். மூன்றால் பெருக்குங்கள். ஒன்றைக் கூட்டுங்கள். அதை மூன்றால் பெருக்குங்கள். இப்போது நீங்கள் நினைத்த எண்ணைக் கூட்டுங்கள். விடை எப்போதும் மூன்றில் முடியும். அந்த மூன்றை அடித்துவிடுங்கள். நீங்கள் நினைத்த எண்ணே மிஞ்சும்.

3. ஏதாவது மூன்று எண்களை அதன் வரிசையில் எழுதிக் கொள்ளுங்கள். அதை ரிவெர்ஸ் ஆர்டரில் எழுதுங்கள். பெரிய எண்ணிலிருந்து சிறியதைக் கழியுங்கள். விடை எப்போதும் 198 தான் வரும். உ-ம்:- 123 321. முயன்று பாருங்கள்.

4. ஒரு பெருக்கல் கணக்கு:

1 1 1 1 1 1 1 1 1
x 1 1 1 1 1 1 1 1 1



செய்து பாருங்களேன். நல்ல பொழுது போகும்

11 comments:

Anonymous said...

சுவாரசியமாக இருக்கு
நன்றி.
சுபாஷ்

நானானி said...

மீ த பஸ்ட்!

நானானி said...

போய் ஒரு பேப்பரும் பேனாவும் எடுத்திட்டு வாரேன். அதுவரை பொறுத்திரும் பிள்ளாய்!!!

சகாதேவன் said...

வருக சுபாஷ்,

நானானி, இன்னுமா பேப்பர்,பென்சில் கிடைக்கலே

goma said...

ஒரே ஒரு முறை, அதுவும் ,1 நிமிடம்தான் பார்த்துக் கொள்ளலாம் .அத்தனை எண்களையும், பார்க்காமல், சொல்ல வேண்டும்.
இது என் ஃபேவரைட் புதிர்.

875279651673033695......
கண்டு பிடியுங்கள்

goma said...

சகாதேவன்!
சகாதேவியிடம் [தாமரையிடம்]உதவி கேட்கக் கூடாது

ராமலக்ஷ்மி said...

ரெண்டும் மூணும் செய்து பார்த்தேன்.
நாலாவது.. இருங்க.. கேல்குலேட்டரை எடுத்துட்டு வாரேன்:).

கோமா,
உங்க புதிருக்கு கேல்குலேட்டரும் உதவாது போலிருக்கே:( !

சகாதேவன் said...

கால்குலேட்டர் வருமுன் எப்படி எழுதி பெருக்கினோமோ அப்படி செய்யுங்கள். அதான் பொழுதுபோகும் என்றேன். கோமா கொடுத்த கணக்கு எனக்கு முடியவில்லை

goma said...

ramalkshmi
let us wait for few more comments for my puthir.ithu,
puthiraa kaNithamA

goma said...

சகாதேவன், ஒரு பிள்ளைப் பூச்சியிடம் ,சரண்டர் ஆனார்.ரொம்ப‌ ச‌ந்தோஷ‌ம்.
விடையை ம‌ட்டும், சொன்னேன் என்று வைத்துக் கொள்ளுங்க‌ள், எல்லோரும் என்னை சாத்து சாத்தூன்னு சாத்தி ,கும்மு கும்முன்னு கும்மி ...அத‌ற்குள் நான்
எஸ்.க்க்க்க்க்...கே...ஏ..ஏ...ப் ஆகிட‌ணும்

goma said...

விடையைச் சொல்லி விடுகிறேன்.வெளியிடுவது உங்கள் வசதி
நான் எழுதிக் கொடுத்த எண்களை நான் எந்த அடிப்படையில் எழுதினேன் என்று சொன்னால் போதும்.அதுதான் விடை.எதாவது இரண்டு டிஜிட் எண்ணை எழுதுங்கள்.உ.ம்.95,இர‌ண்டு என்களையும் கூட்டினால் 14,அதில் எண் 4ஐ மட்டும் 95க்குப் பிறகு இணைக்கவும் [954]அடுத்த ஸ்டெப்,கடைசி எண்களான 5,4 இரண்டையும் கூட்டி வரும் விடையான 9ஐ இணைக்கவும் 9549...அடுத்து 4+9=13,அதில் 3 சேர்க்க 95493...954932...9549325 ..இப்படியே உங்கள் ஆசை தீர எத்தனை எழுதினாலும் முதல் இரண்டு எண்களை மட்டும் நினைவில் வைத்துக் கொண்டு எதிராளியை திணற அடிக்கலாம்.[ஐ.ஐ. டி. டாப்பர் கூட, ஆடிப்போய் விடுவார்]