Wednesday, July 29, 2009

மேடைப் பேச்சிலும் சர்ப்ரைஸ்.

ஒரு மீட்டிங் போயிருந்தேன். நிகழ்ச்சி நிரல் தந்தார்கள். யார் யார் என்ன பேசப் போகிறார்கள் என்று லிஸ்ட் இருந்தது. அதில் மூன்றாவதாக பேசுபவர் என்ன டாபிக்னு போடவில்லை.முதல் இருவரும் தங்களை அழைத்ததும், எல்லோரையும் வணங்கி விட்டு என்ன சொல்லப் போகிறோம் என்று சொல்லி தொடங்கினார்கள்.

மூன்றாமவர் தன் முறை வந்ததும் மேடை ஏறினார். மைக் முன் வந்ததும் அவருடைய செல்போன் சிணுங்கியது. எடுத்து ஹலோ என்றவர்.

...............ராமனா.......நான் நல்லா இருக்கேன், நீஎப்படி இருக்கே....... இங்கே ஒரே வெயில், அங்கே மழை உண்டா..........சரி குற்றாலம் போனியா, சீசன் நல்லா இருக்காமே.......சரி சரி, நான் அப்புறமா பேசறேன், நான் மீட்டிங்கில் இருக்கேன். அடுத்து நான் தான் பேசணும்
என்று மைக் முன் நின்று பேசினால் ஸ்பீக்கரில் கேட்கும் என்றோ, டிவியில் "Walk when you Talk "னு டாக்டர் சொன்னதாலோ மேடையிலேயே அங்குமிங்கும் நடந்து கொண்டு பேசியவர்
...சரி எழுதிக்கிறேன் என்று, தன் சட்டைப் பையில் பேனா இல்லாமல், இறங்கி முன் வரிசையில் அமர்ந்திருந்த என்னிடம் வாங்கி, தன்னுடன் பேசியவரின் போன் நம்பரை எழுதி, ஓகே, நான் கூப்பிடுகிறேன்னு சொல்லி போனை ஆஃப் பண்ணி பாக்கெட்டில் வைத்தார்.

சபையில் இருந்த எல்லோருக்கும் எப்படி இருந்திருக்கும். ஆனால் இது தற்செயலாக நடந்தது இல்லை. விழா ஆர்கனைசரிடம் முன்பே சொல்லியதால் அஜென்டாவில் அவர் டாபிக் போடவில்லை. சரியாக அவர் மேடை ஏறியதும் கடைசி வரிசையில் இருந்த அவர் ஆள் ஒரு மிஸ்ட் கால் கொடுத்தார். எல்லாம் செட் அப் தான்.

மீண்டும் மைக் முன் வந்தவர், எல்லோரும் என்னை மன்னிக்க வேண்டும். இன்று நான் பேச வந்தது செல்போன் Etiquette (சரியான தமிழ் வார்த்தை ஒழுங்கு முறை என்று சொல்லலாமா) பற்றி, என்றார். முதலிலேயே என்ன செய்யக் கூடாதுனு செய்து காண்பித்து விட்டு பின் விவரமாக பேசினார்.

பப்ளிக் ஸ்பீக்கிங் என்று ஒரு புத்தகத்தில் பேச தொடங்குமுன் Startle the Audience என்று இந்த ஐடியா சொல்லியிருந்தது. அதை படித்ததும் உண்டான கற்பனைதான்.
எப்படி இருக்கு?

3 comments:

goma said...

you are startling the readers .

தேவன் மாயம் said...

மிக அருமை!!

சொல்வதை விட செயலில் காண்பிப்பது சிறந்தது..

கிருஷ்ண மூர்த்தி S said...

இந்த உத்தி,ரொம்ப காலமாகவே இருக்கத் தான் செய்கிறது. வாஷிங்டனில் திருமணம் ஜானவாச ஊர்வலத்தை, ஆடியன்ஸ் பின்னாலிருந்து மேடைக்கு நடத்திக் கொண்டு போன உத்தி ஒருவிதம்!
செட்டப் செய்து, இப்படிக் கவனத்தை ஈர்க்கிறவிதம் ஒருவிதம், இந்த ஆங்கிலக் கவிதை கூட, இப்படித்தான்,எதிர்மாறாகச் சிந்திப்பதில் உள்ளவற்றைப் பட்டியல் இடுகிறது!

I'm optimistic

when I look to the ground

and nothing is everything

when you are around.

Because I hate living

when I love to breathe

Swimming under the water

with no hands or feet.

Sinking my ship

When I'm setting sail

Succeeding at life

while I try to fail.

There is no difference

between right and wrong

it's just the reverse

of the inverse where you belong.

Think with your hearbeat

and do with the pulse

and accept that you're included

when there's no one else.