Tuesday, September 1, 2009

ஜே ஜே எங்களுக்கு ஜே ஜே

டோனிடவுன், அர்கன்ஸாஸ் ஸ்டேட்டில் வசிக்கும் ஜிம் பாப்(44), மிஷெல் டுகர்(42) தம்பதிக்கு பத்தொன்பதாவது குழந்தை பிறக்கப் போகிறதாம். நாம் இருவர்-நமக்கு ஒருவர் எல்லாம் எங்களுக்கு இல்லை. முதல் பையனுக்கு வயது 21, சின்னவளுக்கு 8 மாதம். இன்னும் 12 வாரத்தில் எங்கள் கடைக்குட்டி பிறந்திடும், என்று டிவி பேட்டியில் சொல்கிறார்கள்


மூத்த பிள்ளை ஜோஷ், சீக்கிரம் அவர்களை தாத்தா, பாட்டி ஆக்கப் போகிறாராம். எல்லோருடைய பெயரும் ஜே -ல் தான்.



ஜோஷ் 21 : ஜானா, ஜான் டேவிட் 19(twins)


ஜில் 18 : ஜெஸ்ஸா 16 : ஜிங்கர் 15 ஜோஸப் 14


ஜோஸையா 13 : ஜாய் அன்னா 11


ஜெடிடியா, ஜெரெமையா 10 (twins)


ஜேஸன் 9 : ஜேம்ஸ் 8 : ஜஸ்டின் 6


ஜாக்ஸன் 5 : ஜொஹன்னா 3


ஜெனிஃபர் 2 : ஜோர்டன் கிரேஸ் 8 மாதம்


கடைக்குட்டிக்கும் ஜே யில் பெயர் யோசிக்கிறார்கள்.

பிள்ளைகள் ஜே யில் ஆண்/பெண் பேர்கள் லிஸ்ட் எடுத்து ரெடியாக இருக்கிறார்கள்.


ஜே யில் பெயர்களை தங்களுக்கு PEOPLE.com மூலம் அனுப்புமாறு ஜிம் பாப் தம்பதி கேட்கிறார்கள்.
நானும் நம்ம ஊர் பேராக யோசித்தேன்.


ஆண்- ஜம்பு, ஜெகன்


பெண்- ஜானகி, ஜாஸ்மின்
நல்லாயிருக்கா? நீங்களும் எழுதுங்களேன்







தம்பதிக்கு ஜே ஜே.


வாழ்த்துக்கள்


நன்றி - msn.com , people.com



3 comments:

goma said...

நல்ல விளைச்சல் நிலமா இருக்கே!
செல்வத்துள் செல்வம் மக்கள் செல்வம் என்றிருக்கும் ஜே தம்பதிக்கு ஒரு ஓ போடுவோம் ஒரு ஜே போடுவோம்

நானானி said...

நான் சில பேர் சொல்லலாமா?

ஜெகதாம்பா
ஜெகதீஸ்வரி
ஜோதி
ஜோதிகா
ஜெயராம்- ஜெய...ஜெய-ன்னு போய்டேயிருக்கலாம்.
ஜெகன்னாதன்
கை வலிக்குது இத்தோடு நிறுத்திக்கிறேன்.

க. தங்கமணி பிரபு said...

இலங்கை முள்வேலி முகாம்களில் அடைபட்டுள்ள சுமார் 2,80,000 தமிழர்களுக்காக தயவு செய்து ஒரு 20 வினாடிகள் செலவிடுங்கள்.
நாம் செலவழிக்கப்போவது வெறும் 20 வினாடிகள்தான்!! தயவு செய்து

http://www.srilankacampaign.org/form.htm



அல்லது

http://www.srilankacampaign.org/takeaction.htm



என்கிற இணையப்பக்கத்துக்கு சென்று, அங்குள்ள ஈமெய்ல் படிவத்தில் உங்கள் பெயர் மற்றும் ஈமெய்ல் முகவரியை உள்ளிட்டு அனுப்புங்கள்!
அப்படியே இந்த புணிதச்செயலில் உங்கள் நண்பர்களையும் ஈடுபடுத்துங்கள்!! நன்றி!!