Saturday, October 31, 2009

"நான் என்ன எம்.என்.நம்பியாரா இல்லை பி.எஸ்.வீரப்பாவா?

நேற்று சாயங்காலம் பீச்சில் கொஞ்சம் இருக்கலாம் என்று வந்தால் அப்போது வந்த பெண்மணி, "முகுந்தா, இங்கே வா. நீ எழுதிய மொட்டை கடிதத்தினால் உன் தம்பி கிருஷ்ணன் என்ன பாடு படுகிறான். கொஞ்சம் கூட கவலைப்படாமல், வேலை வெட்டி இல்லாமல், வீட்டோடு மாப்பிள்ளையாக் இருக்கும் உன் மாமாவுடன் சேர்ந்து சொத்து விவகாரம் பண்ணிக்கிட்டிருக்கே" என்று திட்டினார்.

இன்று காலை பேங்க்கில் பணம் எடுத்து விட்டு வெளியே வருமுன், எதிரில் வந்த மாமி,
"ரவி, இது உனக்கே நல்லாயிருக்கா? லீலா நல்ல பெண். உன் சந்தேகத்தினால் அவளை ஏன் கொடுமை படுத்தறே? பாவம் அவள்". என்றார்.

நேற்று டி.வியில் 'நானும் ஹீரோதான்' - நிழல்கள் ரவி நடித்த படம் பார்த்தேன். அதில் சினிமா ஷூட்டிங் ஒரு கிராமத்தில் நடக்கிறது. அங்கெல்லாம் ஹோட்டல் ரூம் எல்லாம் கிடைக்காதே, அதனால் நடிகர்கள், டெக்னீஷியன்கள் எல்லோரும் கிராமத்து வீடுகளில் விருந்தினர் போல தங்கினார்கள். ஒரு வீட்டில் நம்பியாரையும் வீரப்பாவையும் பார்த்து விட்டு, அந்த வீட்டுப் பெண்மணி, இவர்கள் இருவரும் ரொம்ப கெட்டவர்களாச்சே, இவங்க்ளுக்கு நான் இடம் தர மாட்டேன்னு சொன்னாங்க. அது போல என்னைப் பார்த்தவர்கள் எல்லாம் கேட்கிறார்கள்".
டிவி சீரியல் பார்க்கும் பெண்கள் அழுவார்கள் என்று ஜோக்ஸ் படித்தேன். இப்படி நம்மையே கேட்கிறார்களே என்று நினைத்தேன்

-----சீரியல் நடிகர் ராஜ்காந்த் சொல்வதாக ஒரு கற்பனை.


எல்லா சீரியலிலும் அவர் ரோல், இப்படித்தான் அமைகிறது. சினிமாவில் சண்டை காட்சிகளில் மட்டுமே நான் பார்த்த ஆரியன் அன்று கே டிவி பேட்டியில் அழகாக சிந்து பைரவியில் வரும் "தொம் தொம்தனம்..."பாட்டை மிக அழகாக பாடினார். தான் நடித்த படம் ஒன்றை தியேட்டரில் பார்க்கும் போது, திரையில் அவர் சீன் வந்ததும் ரசிகர்கள் அவரை கெட்டவார்த்தைகளால் திட்டினார்களாம். இது தான் வில்லன்களுக்கு கிடைக்கும் பாராட்டுக்கள் என்றார், ஆரியன்

நடிகர்களை ஹீரோ, வில்லன், காமெடியன் என்று முத்திரை குத்திவிடாமல் அவர்களின் திறமைகளை அறிந்து வித்தியாசமான ரோல்கள் தர க்ரியேட்டிவ் ஹெட்கள் யோசிக்க வேண்டும்

No comments: